யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா : பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா : பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே - 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும், குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad