'ஹரக்கட்டா' வின் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் கைது : 52 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

'ஹரக்கட்டா' வின் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் கைது : 52 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றல்

(எம்.மனோசித்ரா)

பிரபல போதைப் பொருள் கடத்தல் காரரான துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள ஹரக்கட்டா என்ற நபரால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை மீன்பிடி படகின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரார் கடந்த தினங்களில் தெற்கு பகுதியில் போதைப் பொருள் தொடர்பில் பல சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள் மீட்க்கப்பட்டது.

குறிப்பாக கடந்த தினங்களில் ஹரக்கட்டா என்ற நபரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் தொகை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவை மீன்பிடி படகு மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை தெரியவந்தது. இவ்வாறு போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த படகினை செலுத்திய நபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோட்டேகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து போதைப் பொருள் விற்பனையூடாக பெற்றுக் கொண்ட 52 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கைக்கு போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கு உதவிய நபர் இவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சர்வதேச கடற்பரப்புக்களிலிருந்து இந்த போதைப் பொருட்களைப் பெற்று இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

No comments:

Post a Comment