344 கிலோ கஞ்சாவுடன் இலங்கையின் வட கடலில் மூவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

344 கிலோ கஞ்சாவுடன் இலங்கையின் வட கடலில் மூவர் கைது!

இலங்கை கடற்படையினர் வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு சோதனையின்போது 103 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பரப்பில் கடற்படையினர் இன்று மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போதே சுமார் 344 கிலோ மற்றும் 550 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்திய டிங்கி படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதானவர்கள் நாச்சிகுடா, மன்னார் மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த 34 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதான நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் கேரள கஞ்சா தொகை என்பன காங்கேசந்துரை பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே கடற்படையின் இந்த சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடல் வழியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான ரோந்துப பணிகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment