கிளிநொச்சியில் 29 தொற்றாளர்கள் அடையாளம் : 17 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

கிளிநொச்சியில் 29 தொற்றாளர்கள் அடையாளம் : 17 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றையதினம் (19) 29 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றையதினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர்.

ஏனையவர்களில் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர்,பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 80 பேருக்கு மேல் கொவிட் 19 தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கிளிநொச்சி நிருபர் - எம். தமிழ் செல்வன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad