ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய உப தவிசாளராக ஏ.ஜீ.அமீர் தெரிவு - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய உப தவிசாளராக ஏ.ஜீ.அமீர் தெரிவு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு புதிய உப தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையில் உப தவிசாளராக செயற்பட்டு வந்த யூ.எல்.அஹமட் இராஜினாமா செய்ததன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில், தவிசாளர் ஏ.எம்.நெளபர் முன்னிலையில் இடம்பெற்ற இத் தெரிவில் ஏ.ஜீ.அமீர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் இன்றைய உப தவிசாளர் தெரிவில் 12 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.

உப தவிசாளர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், ஐந்து ஆண் உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

இதில். கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.அக்பர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad