கொரோனா பெருந்தொற்றினால் பராமரிப்பாளர்களை இழந்து தவிக்கும் 15 லட்சம் குழந்தைகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

கொரோனா பெருந்தொற்றினால் பராமரிப்பாளர்களை இழந்து தவிக்கும் 15 லட்சம் குழந்தைகள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் தங்கள் பராமரிப்பாளர்களை 21 நாடுகளில் 15 லட்சம் குழந்தைகள் இழந்து தவிக்கிறார்கள்.

தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான போதைப் பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய நிறுவனம் (நிடா) நிதி அளித்த ஆய்வின் தகவல்கள் ‘தி லேன்செட்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளன. 

அதில் கூறி இருக்கிற முக்கிய தகவல்கள்...!

* கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் தங்கள் பராமரிப்பாளர்களை 21 நாடுகளில் 15 லட்சம் குழந்தைகள் இழந்து தவிக்கிறார்கள்.

* 1.19 லட்சம் இந்திய குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்களை கொரோனாவுக்கு பறி கொடுத்து பரிதவிப்பில் உள்ளனர்.

* இந்தியாவில் மட்டுமே 25 ஆயிரத்து 500 குழந்தைகள் தங்கள் தாய்மாரை கொரோனாவால் இழந்துள்ளனர். 90 ஆயிரத்து 751 குழந்தைகள் தங்கள் தந்தைமாரை பறி கொடுத்துள்ளனர்.

* தென் ஆப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோரையோ, தாத்தா பாட்டியையோ இழந்திருக்கிறார்கள்.

* 2,898 இந்திய குழந்தைகள் தங்களை கவனித்து வந்த தாத்தா பாட்டிகளில் ஒருவரை இழந்திருக்கிறார்கள். 9 குழந்தைகள், தங்களை பராமரித்து வந்த தாத்தா, பாட்டி என இருவரையும் இழந்து விட்டனர்.

* இந்தியாவில் 1000 குழந்தைகளில் 0.5 பேர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். ஆனால் இதுவே தென் ஆப்பிரிக்காவில் 6.4, பெருவில் 14,1, பிரேசிலில் 3.5, கொலம்பியாவில் 3.4, மெக்சிகோவில் 5.1, ரஷியாவில் 2.0, அமெரிக்காவில் 1.8 என்ற அளவில் உள்ளது. என அந்த அறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad