பெரஹரவில் கலந்து கொண்ட நடனக் குழுக்களில் 15 பேருக்கு கொவிட்! - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

பெரஹரவில் கலந்து கொண்ட நடனக் குழுக்களில் 15 பேருக்கு கொவிட்!

ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தில் இடம்பெற்ற எசல பெரஹரவில் கலந்து கொண்ட நடனக் குழுக்களில் 15 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (18) நடனக் குழுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர், ஊர்வலத்தில் இருந்து சவுக்கு மற்றும் தீப்பந்து உள்ளிட்ட 4 நடன குழுக்கள் அகற்றப்பட்டன.

ருஹுனு கதிர்காமம் எசல பெரஹரவின் 9 வது பெரஹர நேற்று வீதி உலா வந்தது.

அதன்படி, பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து, பெரஹர இடம்பெற்ற போதிலும், குறைந்த எண்ணிக்கையிலான நடனக் குழுக்களைச் சேர்க்க சுகாதாரத் பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad