சிறைக் காவலர் பதவிகளுக்கான 1,509 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

சிறைக் காவலர் பதவிகளுக்கான 1,509 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

சிறைக் காவலர் பதவிகளுக்கான 1,509 வெற்றிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது சிறைகளில் காவலர் பதவிகளுக்கு 1,509 வெற்றிடங்களுள்ளன. இவற்றை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெற்றிடங்களுக்காக 29.03.2019 அன்று வர்த்தமானியில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு தொடர்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. எனினும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுக்கும் நடவடிக்கைகளில் இந்த வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad