ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : இன்று ஆரம்பமாகும் ரிசர்வ் டே ஆட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : இன்று ஆரம்பமாகும் ரிசர்வ் டே ஆட்டம்

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று நியூஸிலாந்து அணி 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் 3 ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 5 ஆவது நாளான நேற்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

டெவன் கான்வே 54 ஓட்ங்களையும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 49 ஓட்டங்களையும், சவுத்தி 30 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

32 ஓட்டங்களினால் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாகவும், சுப்மன் கில்லும் சவுத்தியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலி மற்றும் புஜாரா ஜோடி சேர்ந்தாட ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை பெற்றது. புஜாரா 12 ஓட்டங்களுடனும், கோலி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

போட்டி மழை காரணமாக தொடர்ந்து நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. முதல் மற்றும் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது. மீதமிருந்த மூன்று நாட்களில் இரு அணிகளும் விளையாடி உள்ளது.

இந்த போட்டியின் முடிவை எட்டுவதற்காக ஐ.சி.சி. ‘ரிசர்வ் டே’ என்ற மற்றும் ஒருநாளை அறிவித்துள்ளது. வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்கள்தான் நடத்தபடும். ஆனால் இந்த போட்டிக்கு கூடுதலாக ஒருநாள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் ரிசர்வ் டே ஆட்டத்தில் தேநீர் இடைவேளை வரை இந்தியா துடுப்பாட்டம் செய்தாக வேண்டும். அப்படி செய்தால் அதில் கிடைக்கும் ஓட்டங்களை கொண்டு நியூசிலாந்தை கடைசி தருவாயில் துடுப்பாட்டம் செய்ய சொல்லி இந்தியா பணிக்காலம்.

அதற்கு வானிலையும் கைகொடுக்க வேண்டும். மறுபக்கம் நியூசிலாந்து அணி இந்தியாவை துரிதமாக ஆல் அவுட் செய்ய முற்படும்.

No comments:

Post a Comment