ஆளில்லா விமானம் விழுந்ததால் பயத்தில் முட்டைகளை கைவிட்டு சென்ற பறவைகள் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

ஆளில்லா விமானம் விழுந்ததால் பயத்தில் முட்டைகளை கைவிட்டு சென்ற பறவைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள, பறவைகள் இனப்பெருக்கும் செய்யும் தீவு ஒன்றில் ஆளில்லா விமானம் விழுந்ததை அடுத்து, பயந்துபோன எலஜன் டேர்ன் வகைப் பறவைகள் சுமார் 3,000 முட்டைகளைக் கைவிட்டுச் சென்றன.

ஹன்டிங்டன் கடற்கரையில் உள்ள போல்சா சிகா பல்லுயிரினப் பாதுகாப்புப் பகுதியில் கடந்த மாதம் 2 ஆளில்லா விமானங்கள் சட்டவிரோதமாகப் பறக்க விடப்பட்டன. அவற்றுள் ஒன்று வனப்பகுதியில் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வேட்டையாடும் பறவையால் தாக்கப்படுவதாக அஞ்சிய பறவைகள், கடற்கரையில் இருந்து முட்டைகளைக் கைவிட்டுப் பறந்து சென்றதாக அமெரிக்காவின் மீன், வனவிலங்குத் துறை குறிப்பிட்டது.

இந்த மாதம் அதன் குஞ்சுகள் பொரியத் தொடங்கும். அடைகாக்கும் தாய்ப் பறவைகளின் பராமரிப்பில், குஞ்சுகள் வெளிவரும். ஆனால், தற்போது கடற்கரை மணலில், முட்டை ஓடுகள் மட்டுமே தென்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad