முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறையை நீக்கவுள்ள இஸ்ரேல் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறையை நீக்கவுள்ள இஸ்ரேல்

இஸ்ரேலில் வீடு அல்லது ஒரு கட்டடத்தின் உட்புறத்தில் முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறை ஜூன் 15 முதல் நீக்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் யூலி எடெல்ஸ்டீன் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதனை தொடர்ந்து, ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் வெளிப்புறத்தில் முகக்கவசம் அணிவது தொடர்பான விதிமுறையை இஸ்ரேல் நீக்கியுள்ளது.

எடெல்ஸ்டீன் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில் எதிர்பாராத அளவு தொற்றுநோய்கள் ஏற்படவில்லை என்றால், விரைவில் இந்த கட்டுப்பாடு முற்றிலும் நீககப்படும்.

சமூக இடைவெளி பேணல், சுகாதார வழிமுறைகளை பின்பற்றல் உள்ளிட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகளை ஜூன் முதலாம் திகதி நீக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலில் இன்னும் அமுலில் இருக்கும் கடைசி கொவிட்-19 கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆனால், ஒன்பது நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை, இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள், அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை போன்ற வெளிநாட்டு பயணிகள் தொடர்பான பெரும்பாலான கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படவில்லை.

இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை முதல் 12 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடத் ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேலில் தடுப்பூசி பிரச்சாரம் முதல் கட்டமாக மருத்துவ ஊழியர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள நோயாளிகள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது,

அப்போதிருந்து, தடுப்பூசிக்கான தகுதி வயது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது, எனவே 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஊசி போட தகுதியுடையவர்களானார்கள்.

No comments:

Post a Comment