இலங்கையில் அதிகரிக்கப்பட்ட்து எரிபொருட்களின் விலைகள் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட்து எரிபொருட்களின் விலைகள்

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு  முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,
பெட்ரோல்
ஒக்டேன் 92 - ரூ. 20 இனால் - ரூ. 157
ஒக்டேன் 95 - ரூ. 23 இனால் - ரூ. 184

டீசல்
ஒட்டோ டீசல் - ரூ. 7 இனால் - ரூ. 111
சுப்பர் டீசல் - ரூ. 12 இனால் - ரூ. 144

மண்ணெண்ணெய் - ரூ. 7 இனால் - ரூ. 77 

ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான (CEYPETCO) எரிபொருள் விநியோக நிலையங்களில் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விலை அதிகரிப்புக்கு அமைய, தமது எரிபொருள் விநியோக நிலையங்களிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதாக, இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம் (LIOC) அறிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக, இன்றையதினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad