வத்தளை, ஜா எலயில் அநாவசிய கட்டங்களை உடைத்து தகர்த்த துரித நடவடிக்கை - நிமல் லன்சா - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

வத்தளை, ஜா எலயில் அநாவசிய கட்டங்களை உடைத்து தகர்த்த துரித நடவடிக்கை - நிமல் லன்சா

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்யும் தொடர்ச்சியான மழை காரணமாக வத்தளை மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் பாரிய வெள்ளம் ஏற்படக் காரணம் அநாவசிய கட்டடங்கள் ஆகும். அவ்வாறான கட்டங்களை உடைத்து தகர்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வத்தளை மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து குறித்த பிரதேச செயலகங்களில் தகவல்களைப் பெற்று அநாவசிய கட்டடங்களை உடைத்து தகர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டிருந்தவாறு ஜாஎல பிரதேசத்தில் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தால் அதன் ஊடாக நீர் முத்துராஜவெல ஈரநிலப்பகுதிக்குள் வடிந்திருக்கும்.

எனினும் இந்த கால்வாய் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் சில வியாபாரிகளால் அநாவசியமாக கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

எனவே இவற்றை அகற்றி கம்பஹா மாவட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment