இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் மூன்று புது முகங்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் மூன்று புது முகங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் சுற்றுப் பயணத்திற்கான 24 பேர் கொண்ட தனது அணியை இலங்கை கிரிக்கெட் நேற்று அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தில் பங்கெடுத்த ஆஷென் பண்டாராவைத் தவிர அனைத்து வீரர்களும் இந்த சுற்றுப் பயணத்தில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

அதேநேரம் சரித் அசலங்க, தனஞ்சய லக்ஷான் மற்றும் இஷான் ஜெயரத்ன பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அணியில் புதிதாக இடம்பிடித்துள்ளனர்.

வரையறுக்கப்பட்ட ஓவர்களில் ஜெயவிக்ரம சேர்க்கப்படுவது பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கனவு அறிமுகத்தின் பின்னணியில் இடம்பெறுகிறது.

அவர் இறுதிப் போட்டியில் 178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டக்காரர் விருதையும் பெற்றார். இவரின் இந்த பங்களிப்பு தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்ற இலங்கைக்கு உதவியது.

இந்த சுற்றுப் பயணத்தின் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும். அதே நேரம் சுற்றுப் பயணத்தில் இரு ஒருநாள் போட்டிகள் அடங்கும்.

இலங்க‍ை அணி
குசல் ஜனித் பெரேரா (c), குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஷாங்க, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டிசில்வா, ஓசர பெர்னாண்டோ, சரித் அசலங்க, தசூன் சானக்க, வனிந்து ஹசரங்க, ரமேஸ் மெண்டீஸ், சமிக்க கருணாரத்ன, தனஞ்சய லக்ஷான், இஷான் ஜெயரத்ன, துஷ்மந்த சாமர, இசுறு உதான, அஷித பெர்னாண்டோ, நுவான் பிரதீப், பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ,லக்ஷான் சந்தகான், அகில தனஞ்சய, பிரவீன் ஜெயவிக்ரம.

No comments:

Post a Comment

Post Bottom Ad