சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யத் தயாராகவிருந்த சங்குகள் இலங்கை சுங்கப் பிரிவினால் பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யத் தயாராகவிருந்த சங்குகள் இலங்கை சுங்கப் பிரிவினால் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராகவிருந்த 33,680 சங்குகள் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதியில் வைத்தே ஒரு தனியார் நிறுவனத்தினால் சங்குகளின் பங்குகளை கொள்கலன்களின் அடைத்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முற்படுகையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் திணைக்களத்தினால், ஏற்றுமதி உரிமத்தின் அதிகாரத்தின் கீழ் தவிர சங்கு ஓடுகளை ஏற்றுமதி செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்கு ஓடுகளை வைத்திருத்தல், வாங்குவது, காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல், போக்குவரத்து அல்லது ஏற்றுமதி செய்வதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 33,680 சங்குகளில் 21,480 பங்குகள் 70 மி.மீ. க்கும் குறைவா விட்டம் கொண்டவை என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad