இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ள கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ள கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர் இன்று (07.06.2021) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவித்தல் பிரகாரம் அவர்கள் இன்று திங்கட்கிழமை அங்கு ஆஜராகவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கோரினார்.

அதன்படி இன்றையதினம் குறித்த கப்பல் கெப்டன் உள்ளிட்ட மூவரும் மன்றில் ஆஜராகும் போது, கப்பலின் வி.டீ.ஆர். உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அரிக்கை பெறுவதற்கான கோரிக்கையும் விடுக்கவுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. குழு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இதுவரை வாக்கு மூலம் பெறப்படாத கப்பல் பணியாளர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment