ரணிலை சந்தித்தார் மஹிந்த : சபையில் ஆற்றிய உரை, மீள் பிரவேசத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

ரணிலை சந்தித்தார் மஹிந்த : சபையில் ஆற்றிய உரை, மீள் பிரவேசத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளதுடன் சமகால விடயங்கள் தொடர்பில் பரந்துப்பட்டளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை மற்றும் அவரது மீள் பிரவேசம் குறித்து பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதன் பின்னர் பாடசாலை நண்பரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad