கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேருக்கு கொரோனா

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஐம்பத்தெட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடைய ஐம்பத்தெட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் முப்பத்தி ஏழு (37) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.

குறித்த பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எல்.நௌபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

No comments:

Post a Comment