தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பெண் ரோபோ - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பெண் ரோபோ

கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹொங்கொங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகள் மற்றும் வயதானவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை ‘கிரேஸ்’ ரோபோ செய்யும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவும் வகையில், அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு, மனிதரைப் போல் உருவ அமைப்பு கொண்ட பெண் ரோபோவை ஹொங்கொங்கில் டேவிட் ஹான்சன் என்பவர் உருவாக்கியுள்ளார்.

கிரேஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரிப்பு, சோகம் உள்ளிட்ட மனித முக பாவனைகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதர்கள் பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பதில் அளிக்கிறது.

கொரோனா நோயாளிகள் மற்றும் வயதானவர்களிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகள் ‘கிரேஸ்’ ரோபோ செய்யும்.

ஒரு செவிலியர் போல் பணிகளை செய்கிறது. இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை எளிதில்கண்டறிகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதால் வைத்தியர்கள், தாதிகள் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad