ஓட்டமாவடியில் கொரோனாவால் ஆசிரியர் மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

ஓட்டமாவடியில் கொரோனாவால் ஆசிரியர் மரணம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கொரோனாவினால் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை 03 அன்டிஜன் பரிசோதனை மற்றும் 52 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் 03 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும், மேலும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் ஐம்பத்தி இரண்டு (52) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று வியாழக்கிழமை கொரோனாவினால் 57 வயதுடைய காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment