ஏறாவூரில் கிராம உத்தியோகத்தர் பிரிவுவொன்று முடக்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

ஏறாவூரில் கிராம உத்தியோகத்தர் பிரிவுவொன்று முடக்கம்

எம்.எஸ்.எம்.நூருதீன் 

ஏறாவூர்-02 கிராம உத்தியோகத்தர் பிரிவு நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏறாவூர்-02 கிராம உத்தியோகத்தர் பிரிவானது நேற்று 05.06.2021 ஆந் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகளவிலானோர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியினால் நேற்று 05.06.2021 சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மாணத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad