நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் போதைப் பொருட்களுடன் கைது..! - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் போதைப் பொருட்களுடன் கைது..!

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப் பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கிரேண்பாஸ் பகுதியில் கொழும்பு குற்றப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, கிரிபத்கொட மற்றும் கண்டி ஆகிய பகுதியில் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், கண்டியில் கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கண்டியில் 60 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தும்மலசூரிய பகுதியில் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 103 கிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, தியகொட பகுதியில் 13 கிராம் ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பகமுவ பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தமை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சுமார் 3000 கஞ்சா செடிகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment