உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன் - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன் - விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய வீரர் ஒப்பந்தங்கள் குறித்து உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய வீரர் ஒப்பந்தங்கள் குறித்து உடன்பாடு எட்டப்படாமை குறித்து வருந்துகிறேன்.

எங்கள் வீரர்களை போட்டித்தன்மை மிக்க கொடுப்பனவை நோக்கி ஊக்குவிப்பது முக்கியமான போதிலும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இதனை ஒரு தீர்க்கமான காரணியாக கொள்ளக்கூடாது. விளையாட்டு வீரர்கள் எப்போதும் நாட்டிற்கு முதலிடம் வழங்கி விளையாட்டில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad