ஜூலை முதல் வாரத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும் : சமுர்த்தி உத்தியோகத்தர்களை தாக்குவது பொருத்தமற்ற செயற்பாடு - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

ஜூலை முதல் வாரத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும் : சமுர்த்தி உத்தியோகத்தர்களை தாக்குவது பொருத்தமற்ற செயற்பாடு - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் அனைத்து துறைகளிலும் செயற்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடியான சூழ்நிலையில் 5000 ரூபா நிவாரண நிதி வழங்கப்பட்டுகிறது. 

சமுர்த்தி வழங்களில் ஒரு சில பிரதேசங்களில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. 5000 ரூபா நிவாரண நிதியை பெறுவதற்கு தகுதியிருந்தும் நிதியை பெறாதவர்கள் பிரதேச செயலகம் ஊடாக மேன்முறையீடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளோம். அதனை விடுத்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதலை முன்னெடுப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அனைத்து துறைகளிலும் கடுமையான முறையில் செயற்படுத்த பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை 15 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. பல பிரதேசங்களில் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றன. 

சமுர்த்தி அதிகாரிகள் பலர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இதன் காரணமாகவே கொடுப்பனவினை இக்காலப்பகுதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என வரையறுக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment