பொலிஸ் வாகனத்திலிருந்து வெளியில் குதித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

பொலிஸ் வாகனத்திலிருந்து வெளியில் குதித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர், வாகனத்திலிருந்து வெளியில் குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை, வத்தல்பொல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக குறித்த நபர் நேற்றையதினம் பாணந்துறை வத்தல்பொல பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வேளையில் அவர் தப்பிக்கும் நோக்குடன் பொலிஸ் வாகனத்திலிருந்து வெளியில் குதித்து காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயங்களுக்குள்ளான நிலையில் அவரை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த உப பொலிஸ் பரிசோதகரையும், பாணந்துறை வடக்கு காவல்துறை சார்ஜென்ட் ஆகியோரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad