ஒட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பதிவாளர் பிரிவை தடுத்து நிறுத்தினார் நஸீர் அஹமத் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

ஒட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பதிவாளர் பிரிவை தடுத்து நிறுத்தினார் நஸீர் அஹமத்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கடந்த 48 வருட காலமாக ஒட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இயங்கி வந்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பதிவுக்கிளை அண்மையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து கல்குடா மக்களின் கோரிக்கையையேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமத் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிறப்பு, இறப்பு பதிவாளர் பிரிவு கோறளைப்பற்று வாழைச்சேனைக்கு மாற்றப்பட்டதை இடைநிறுத்தி பதிவாளர் நாயகத்தினால் அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதி பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி மற்றும் பிரதியின் மொழிபெயர்ப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad