சாய்ந்தமருதில் பிரயாணத் தடையை மீறி செயற்பட்ட இளைஞர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

சாய்ந்தமருதில் பிரயாணத் தடையை மீறி செயற்பட்ட இளைஞர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை

நூருல் ஹுதா உமர்

பாதுகாப்பு படையினர் வீதிகளில் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது நியாயமான காரணங்களின்றி பிரயாணத் தடையை மீறி வீதிகளில் உலாவித் திருந்த இளைஞர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை எடுக்கும் முகமாக பாதுகாப்பு படையினரால் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெறுபேற்று முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படாமையை அடுத்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இனிவரும் காலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுவதனுடாக பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்படுபவர்களுக்கு எதிராக பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad