ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சுகாதார துறையினர் ஆகியோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad