மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நசீர் அஹமட் அவர்களின் முயற்சியின் பலனாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்தில் இரண்டு பாடசாலைகளும், ஏறாவூர் கல்வி கோட்டத்தில் இரண்டு பாடசாலைகளும், காத்தான்குடி கல்வி கோட்டத்தில் ஒரு பாடசாலையும் தரமுயர்த்தப்பட்டுள்ளன.  

மேலும் காத்தான்குடி கோட்டத்திலிருந்து இன்னுமொறு பாடசாலையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது.

1. BT / BC / Rahumaniya M.V. Eravur
2. BT / BC / Al Ashar Girls High School, Eravur
3. BT /BC / Al Ameen M.V. Kaattankudy
4. BT /BC / Al Hithaya M.V. Meeravidai
5. BT /BC / Fathima Baliga M.V.Oddamavady

மட் / மம / ரஹுமானியா மஹா வித்தியாலயம் ஏறாவூர் 
மட் / மம / அல் அஸ்ஹர் மகளிர் வித்தியாலயம் ஏறாவூர் 
மட் / மம / அல் அமீன் மஹா வித்தியாலயம் காத்தான்குடி
மட் / மம / அல் ஹிதாயா மஹா வித்தியாலயம் மீராவோடை 
மட் / மம / பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம் ஒட்டமாவடி 

No comments:

Post a Comment

Post Bottom Ad