யால சரணாலயத்தை திறப்பதற்கு தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

யால சரணாலயத்தை திறப்பதற்கு தீர்மானம்

யால சரணாலயத்தை எதிர்வரும் 8 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படையினருக்காக சரணாலயம் திறக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மாத்திரம், சரணலாயத்தை திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையிடம்  வினவியபோது, பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

எனினும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் பயிற்சிகள் ஏதும் நடைபெற மாட்டாது என கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad