இலங்கையிலுள்ள தனியார் வங்கிகளின் அனைத்துக் கிளைகளும் முழுமையாக மூடப்படும்..! முழு விபரம் உள்ளே - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

இலங்கையிலுள்ள தனியார் வங்கிகளின் அனைத்துக் கிளைகளும் முழுமையாக மூடப்படும்..! முழு விபரம் உள்ளே

(நா.தனுஜா)

இலங்கையில் அமுலிலுள்ள அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் வர்த்தக வங்கிகளின் அனைத்துக் கிளைகளும் சில தினங்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளன. 

எனினும் அவ்வாறு மூடப்படும் தினங்களிலும் இணைய வழியிலான 'ஒன்லைன்' வங்கிச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பத் வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு 'விசேட கிளைகள்' உள்ளடங்கலாக சம்பத் வங்கியின் அனைத்துக் கிளைகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். 

எனினும் வாடிக்கையாளர்கள் அவசர தேவைகளின் போது இணைய வழியில் எமது வங்கிச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள கொஷர்ஷல் வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. 

அதேவேளை அதன் இணைய வங்கிச் சேவையின் ஊடாகப் பாதுகாப்பான கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் 7 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தமது வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருக்கும் என்.டி.பி வங்கி, ஏதேனும் அவசர தேவைகளின் போது அந்தந்தப் பிரதேச வங்கிக் கிளைகளின் முகாமையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

வங்கிக் கிளைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் அட்டன் நெஷனல் வங்கி, போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக இன்றைய தினமும் (திங்கட்கிழமை) நாளைய தினமும் (செவ்வாய்கிழமை) தமது கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad