ஓட்டமாவடி, மஜ்மா நகரில் இதுவரை 729 உடல்கள் நல்லடக்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

ஓட்டமாவடி, மஜ்மா நகரில் இதுவரை 729 உடல்கள் நல்லடக்கம்

690 முஸ்லிம்கள்
15 இந்துக்கள்
15 கிறிஸ்தவர்கள்
7 பௌத்தர்கள
2 வெளிநாட்டவர்கள்

கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள “மஜ்மா நகர்" அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று (22) மாலை வரை 729 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் தெரிவித்தார்.

அந்த வகையில், அங்கு இதுவரை 690 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 15 இந்துக்களின் உடல்கள், 15 கிறிஸ்தவர்களின் உடல்கள், 7 பௌத்த உடல்கள், 2 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் தெரிவித்தார்.

எஸ்.எம்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment

Post Bottom Ad