7 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

7 மாவட்டங்களில் 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரிவுகளில் சில தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி மற்றும் முனைச்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தின் செவனகல பொலிஸ் பிரிவின் கிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரதெனவெல, ஹபருகல, மஹாகம, இந்திகோலபலச, ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கும்ஸ் தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment