வவுனியாவில் மேலும் 30 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

வவுனியாவில் மேலும் 30 பேருக்கு கொரோனா

வவுனியா - சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சகாயமாதாபுரத்தில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த கிராமத்தில் முடக்கல் நிலை கடுமையாக்கப்பட்டு, அப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு, சுகாதார பிரிவினரால் பீ.சீ.ஆர் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பீ.சீ.ஆர். பரிசோதனை முடிவுகளின் பிரகாரம், மேலும் 22 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதேவேளை தெற்கிலுப்பைக்குளம், தோணிக்கல், வவுனியா, சுந்தரபுரம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளிலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad