18 ஆமைகள், 3 டொல்பின்களின் உடலங்கள் இதுவரை கரை ஒதுங்கின - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

18 ஆமைகள், 3 டொல்பின்களின் உடலங்கள் இதுவரை கரை ஒதுங்கின

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை வரையில் கரை ஒதுங்கிய 18 கடலாமைகள், 3 டொல்பின் மீன்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.

இதில் குறிப்பாக இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் தெரிவித்தது.

கற்பிட்டி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ள நிலையில், இவை பதிவான எண்னிக்கை மட்டுமே என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுவரை சம்பவம் தொடர்பில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏர்பட்ட தீ பரவல் காரணமாக கடலில் கலந்த பல தொன் நிறைக் கொண்ட இரசாயங்கள் காரணமாக இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குகின்ரனவா என அவ்வந்த பகுதிகளின் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக கரை ஒதுங்கிய உயிரிழங்களின் மாதிரிகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்துக்கும் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையத்துக்கும் அனுப்பி இரசாயனத் தாக்கம் தொடர்பில் உறுதிப்படுத்த வன ஜீவராசிகள் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை தொடர்பில் அத்திட்டிய மிருக வைத்திய பகுப்பாய்வு நிலையம் ஊடாக அரிக்கை பெற காலி நீதிமன்றம் உத்தர்விட்டிருந்த பின்னணியில், பேராதனை பல்கலைக் கழக்த்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment