வெறும்15 நிமிடங்கள் இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை மாதாந்த அமர்வு : ஆயினும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

வெறும்15 நிமிடங்கள் இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை மாதாந்த அமர்வு : ஆயினும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று (04) வெள்ளிக்கிழமை சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றது.

வெறுமனே 15 நிமிடங்கள் இடம்பெற்ற இக்கூட்டத் தொடரில் பல முக்கிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வினாப் பத்திரங்கள் அச்சிட்டு வழங்குவதற்கான செயற்திட்டம் தடையில்லாமல் இடம்பெறுவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சுகாதார நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

அதற்காக நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் தலைமையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் வெளிக்கள ஊழியர்கள் அடங்கிய சுகாதார குழு ஒன்று அமைந்துள்ளதாகவும் அக்குழு தொடர்ச்சியாக பிரதேசங்களை கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதன்போது நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை பெற்றுக் கொடுத்தமைக்கு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பிரதேச சபை தலைவர் வேலுயோகராஜ் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

பூண்டுலோயா நிருபர்

No comments:

Post a Comment