வீதியோர குண்டு வெடிப்பில் சிதறிய பேருந்து - குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

வீதியோர குண்டு வெடிப்பில் சிதறிய பேருந்து - குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலி

வீதியோர குண்டு வெடிப்பில் சிதறிய பேருந்திலிருந்த 11 பேர் பலியாகினர்.

20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தலீபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

ராணுவம் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில்  தலீபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என மாகாண ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் புதிய பகுதிகளை பிடிப்பதற்கும், சோதனைச் சாவடிகளை தாக்குவதிலும் கவனம் செலுத்துவதால் அரசுப் படைகளுடனான மோதலும் தீவிரமடைந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரை முழுவதுமாக திரும்ப பெறும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், வன்முறை அதிகரித்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பாத்கிஸ் மாகாணம் ஆப்காமரி கிராமத்தில் வீதியோரம் பயங்கரவாதிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி குண்டு நேற்று மாலை வெடித்து சிதறியது. இதில் பயணிகள் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் தலிபான் அமைப்பினர் இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என மாகாண ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதேபோல் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பாக்லான் மாகாணத்தில் உள்ள ஜுக்லா மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் தலீபான்கள் தொடர்ந்து அங்கு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜுக்லா மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடியின் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையில் நேற்று அதிகாலை வரையில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

இதில் 2 மூத்த அதிகாரிகள் உட்பட 8 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காபூலில் இந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment