11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு : பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு : பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில்

இலங்கையில் பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தனிமைப்படுத்தல் உத்தரவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகளே இன்று அதிகாலை தனிமைப்படுத்தல் உத்தரவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு குறித்த பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்குமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad