மும்பையில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் பலி, 7 பேர் காயம் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

மும்பையில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் பலி, 7 பேர் காயம்

மும்பையில் பெய்த கனமழையால் மூன்று மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.

கட்டடம் இடிந்ததைத் தொடர்ந்து அருகில் வலுவற்றுக் காணப்படும் பிற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

கட்டடம் இடிந்தபோது குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உள்ளே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் துரிதமாக இடம்பெற்று வருவதாக மும்பை பொலிஸ் அதிகாரி ரவீந்திர கதம் கூறியுள்ளார்.

மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றே புதன்கிழமை தாமதமாக இடிந்த வீழ்ந்தாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு பணிகளை குடியிருப்பாளர்களும், தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாளும் முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad