களுபோவில வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் விரைவாக கட்டி முடிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் இந்திக - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

களுபோவில வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் விரைவாக கட்டி முடிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் இந்திக

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையின் மில்லனியம் விடுதி வளாகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் விரைவாக கட்டி முடிக்கப்படும். அத்துடன், கொவிட்-19 தொற்று நோயினால் நோய்வாய்ப்பற்றவர்களுக்கு இடமளிக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் நிலவரத்தினை எதிர்கொள்ள வைத்தியசாலை கட்டமைப்புக்களை இன்னும் மேம்படுத்தி அபிவிருத்தி செய்வது நாட்டின் பெரும் தேவை என்பதனை சுட்டிக் காட்டிய அமைச்சர், இருக்கும் கொவிட்-19 தொற்றின் அச்சுறுத்தலான சூழ்நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றி பொருத்தமான செயல்பாட்டுமுறைமையின் கீழ் இதன் கட்டுமான பணிகளை முழுமை செய்து சுகாதார அமைச்சிடம் கையளிப்பதாகவும் கூறினார்.

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையின் மில்லனியம் விடுதி வளாகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றின் கட்டிடங்களை பார்வையிடச் சென்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

சுகாதார அமைச்சின் ஏற்பாடுகளுடன் ரூ. 743 மில்லியன் செலவில் இந்தக் கட்டிடம் இயக்க அரங்கு 07 ஐயும் ஆய்வகம் 05 யையும் வெளிநோயாளர் பிரிவு 02 மற்றும் விடுதி வளாகம் உட்பட மொத்தம் 10 தளங்களைக் கொண்டதாகும்.

இதன் கட்டுமானப் பணிகளை கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இதனை செயல்படுத்தி வருகிறது.

இந்நிகழ்வில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்ன்சிறி கலுபஹன, உப தலைவர் பாக்ய ஜயதிலக உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

No comments:

Post a Comment