அறிக்கையில் இல்லாத விடயத்தை இருப்பதாக கூறியுள்ளமை ஆணைக்குழுவுக்கு இழைக்கப்பட்ட அவமானம், அல்லாஹ் மீண்டும் பிறப்பாரென நான் ஒரு போதும் கூறவில்லை - ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு கடிதம் அனுப்பினார் ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

அறிக்கையில் இல்லாத விடயத்தை இருப்பதாக கூறியுள்ளமை ஆணைக்குழுவுக்கு இழைக்கப்பட்ட அவமானம், அல்லாஹ் மீண்டும் பிறப்பாரென நான் ஒரு போதும் கூறவில்லை - ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு கடிதம் அனுப்பினார் ஞானசார தேரர்

ஞான­சார தேரரின் செயற்­பா­டுகள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது என நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்­பாக ஆராய்ந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை மேற்கோள்காட்டி ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்­ளீர்கள். அது தவ­றாகும். இவ்­வாறு ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் எந்த இடத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டில்லை. ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கையில் இல்லாத விட­யத்தை இருப்பதாக கூறியுள்ளமை ஆணைக்­கு­ழு­வுக்கு இழைக்­கப்­பட்ட அவ­மா­ன­மாகும் என பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சா­ர தேரர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீனின் மனைவி ஆயிஷா பதி­யு­தீ­னுக்கு அனுப்பி வைத்துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார். 

கடி­தத்தின் பிரதி ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ரிசாத் பதி­யு­தீனின் மனைவி ஆயிஷா பதி­யுதீன் தனது கண­வரை விடு­தலை செய்­யு­மாறு ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடிதத்தில் ஞான­சார தேரர் பற்­றியும் குறிப்­பிட்­டி­ருந்­ததால் அதற்குப் பதி­ல­ளிக்கும் வகையில் இக்­க­டிதம் எழு­தப்­பட்­டுள்­ளது. 

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘உங்­க­ளது கணவரான ரிசாத் பதி­யுதீன் தேர்தல் காலங்­களில் உங்­க­ளுடன் வாக்க­ளிப்­ப­தற்கு செல்லும் சந்­தர்ப்­பங்­களில் உங்­களை தொலைக்காட்­சியில் மற்றும் பத்­தி­ரி­கை­களில் கண்­டி­ருக்­கிறோம். அந்தக் காட்­சி­களில் ரிசாத் பதி­யு­தீனின் மனைவி என குறிப்பிடப்பட்டி­ருந்­தது. அது நீங்­க­ளாக இருக்­கலாம்.

ஜனா­தி­பதிக்கு உங்­களால் அனுப்­பப்­பட்­ட­தாக கூறப்­படும் கடி­தத்தை எழு­தி­யவர் ஞான­சார தேரர் ­பற்றி குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்­கான கார­ணங்கள் தொடர்பில் தெரி­வித்­துள்­ளமை விமர்­ச­னத்­துக்­கு­ரி­ய­தாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­ப­டாத விட­யங்கள் உங்கள் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­தா­ரி­க­ளுக்கு உத­விகள் வழங்­கி­யது தொடர்பில் சந்­தே­கத்­தின் ­பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள ரிசாத் பதியு­தீனை விடு­தலை செய்து கொள்­வ­தற்கு தயா­ரா­வ­தென்றால் குறைந்­தது கடி­தத்தை எழு­தி­ய­வ­ரா­வது ஆணைக்­கு­ழுவின் அறிக்கையை வாசித்­தி­ருக்க வேண்­டு­மென்­பதை நாம் ஞாபகப்படுத்­து­கிறோம்.

நீங்கள் அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் ‘ஞான­சார தேரரும் அவ­ரது செயற்­பா­டு­களும் குண்­டுத் ­தாக்­கு­தல்­க­ளுக்கு பிரதான கார­ணி­யாக அமைந்­தது. ஆனால் அவரோ அல்­லது இதற்குப் பொறுப்­பு­கூ­ற­ வேண்­டி­ய­வர்கள் என இனங் காணப்­பட்­ட­வர்­களோ இது­வரை கைது செய்­யப்­ப­டவோ விசா­ர­ணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை’ என தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்பிட்­டுள்­ளீர்கள். ஆனால் ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கையில் எந்த இடத்­திலும் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டில்லை.

உங்­க­ளது கண­வரின் நண்­பர்கள், அர­சியல் ஆத­ர­வா­ளர்கள் பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் தப்லீக் ஜமாஅத், இஹ்வான் முஸ்லிம், ஜமா­அத்தே இஸ்லாம் மற்றும் தெளஹீத் குழு­வினர் இந்­நாட்டில் மேற்கொண்ட அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் குறித்து ஆணைக்குழுவின் அறிக்­கையில் பல விட­யங்கள் தெரிவிக்கப்பட்டுள்­ளன. இந்த அமைப்­புகள் தற்­கொலைத் தாக்குதல்­களை நியா­யப்­ப­டுத்தி வெளி­யிட்­டுள்ள அறிக்­கைகள், தாக்­கு­தல்கள் உட்­பட விட­யங்­களை நீங்கள் கடி­தத்தில் தவிர்த்திருப்பது விந்­தை­யா­க­வுள்­ளது.

இலங்­கையில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­து­வதை நியா­யப்­ப­டுத்தி சஹ்ரான் தெரி­வித்த 10 கார­ணங்­களில் 8 கார­ணங்­களை நீங்கள் ஏற்றுக் கொள்­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளீர்கள். சஹ்ரான் கடை­சி­யாக வெளி­யிட்­டுள்ள வீடியோ பதிவில் தெரி­வித்த 10 கார­ணங்­களில் இரு கார­ணங்­களை நீங்கள் வேண்­டு­மென்றே குறிப்­பி­டு­வ­தற்கு தவறியிருக்­கி­றீர்கள்.

குர்­ஆனின் போத­னை­க­ளின்­படி சஹ்ரான் தற்­கொலை தாக்­கு­தலை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்த கருத்­து­களை குறிப்­பிட நீங்கள் தவறியி­ருக்­கி­றீர்கள். “இஸ்­லாத்தை பின்­பற்­றா­த­வர்­களை கண்ட இடங்­களில் கொலை செய்­வ­தற்கு அல்­லாஹ்­வினால் உத்­த­ரவு வழங்கப்­பட்­டுள்­ளது’’ என சஹ்ரான் கூறி­யுள்ளார்.

அல்லாஹ் மீண்டும் பிறப்­பா­ரென ஞான­சார தேரர் தெரி­வித்­த­தாக கூறி­யுள்­ளமை முழுப் பொய்­யா­ன­தாகும். ஞான­சார தேரர் எந்தச் சந்தர்ப்­பத்­திலும் இவ்­வாறு தெரி­விக்­க­வில்லை. 

உங்­க­ளது சமூகத்தில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள அடிப்படைவாதத்தை அழிப்­ப­தற்கு உங்கள் கணவர் ஏதும் நடவடிக்கை எடுத்­துள்­ளாரா? அதை­வி­டுத்து உங்கள் கணவர் இஸ்லா­மிய அடிப்­ப­டை­வாதம் இல்லை என பிர­சாரம் செய்து சஹ்ரான்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இஸ்லாமிய தீவிரவாதிகளை இலங்கையிலிருந்து அழிப்பதற்காக அவர்களுக்கு உதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்குபவர்களை கைது செய்வதற்கு நீங்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். இல்லையேல் உங்கள் பிள்ளைகளும் என்றோ ஒருநாள் சமயத்தின் பெயரால் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment