தேர்தலில் அ.தி.மு.க தோல்வி...! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

தேர்தலில் அ.தி.மு.க தோல்வி...! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி

தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. 

அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 

அ.தி.மு.க கூட்டணி தோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.

சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி.

இதேபோல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். 

அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad