இலங்கை வரும் விமானங்களில் ஏற்றிவரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

இலங்கை வரும் விமானங்களில் ஏற்றிவரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது

இலங்கைக்கு வரும் விமானங்களின் பயணிகள் எண்ணிக்கையை விமான சேவை ஊழியர்கள் உள்ளிட்ட தலா 75 ஆக குறைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (03) முதல் இரண்டு வாரங்களுக்கு இந்நடைமுறையை பேணுமாறு, அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி சபையின் (CAA) தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் பரவல் அபாயம் அதிகரித்து வருகின்றமை மற்றும் பல சர்வதேச விமான சேவை நிறுவனங்களால் நாட்டிற்கு அழைத்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஒரு சில விமான சேவை நிறுவனங்கள் 200 இற்கும் அதிகமான பயணிகளுடன் இலஙகை வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad