சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற் செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறு போகத்தில் காணப்படுகிறது - உர செயல பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற் செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறு போகத்தில் காணப்படுகிறது - உர செயல பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய

சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற் செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறு போகத்திலும் காணப்படுவதாக உர செயலகத்தின் பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மேலதிக பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கும் சேதனப் பசளை கையிருப்பில் உள்ளது. எதிர்காலத்தில் சேதனப் பசளை உற்பத்தியாளர்களின் உற்பத்திக் கொள்ளளவு அதிகரிக்கப்படும். சிறு போகத்திற்கு தேவையான இரசாயனப் பசளை ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் இரசாயனப் பசளையை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது.

இரசாயன பசளை இறக்குமதியை தடை செய்துள்ள போதிலும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளையை விற்பனை செய்வதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென உர செயலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும் போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எந்த வகையான பயிரினத்திற்கும் பயன்படுத்தக் கூடிய சேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உயிரியல் உற்பத்தி பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தொற்றா நோய்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரசாயன பசளையின் தாக்கம் பிரதான பங்கு வகிப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அதனால், இலங்கை விரைவில் சேதனப் பசளையைப் பயன்படுத்த முன்வர வேண்டுமென அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment