கொழும்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

கொழும்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்த வகையில் 4 மாவட்டங்களில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளும் ஒரு பொலிஸ் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலேயே இவ்வாறு சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வலான வடக்கு, வேகட மேற்கு, பள்ளமுல்ல கிழக்கு மற்றும் கிரிபேரிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பொலிஸ் பிரிவின் நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் உவர் மலை கிராமசேவகர் பிரிவு, உப்புவெளி பொலிஸ் பிரிவின் அன்புவழிபுரம் கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment