சாய்ந்தமருதைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி கல்முனையில் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 9, 2021

சாய்ந்தமருதைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி கல்முனையில் கைது

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை இன்று (09) மாலை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று மாலை சாய்ந்தமருது பகுதியில் வீதியில் வைத்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த நபரை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தபோது இவரின் உடமையில் இருந்து 100 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் எனவும் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

1 comment:

  1. Such virus in the community will harm the entire generations He should be hanged to death

    ReplyDelete

Post Bottom Ad