காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கிண்ணியாவுக்கு தற்காலிகமாக குளிரூட்டி கையளிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கிண்ணியாவுக்கு தற்காலிகமாக குளிரூட்டி கையளிக்கப்பட்டது

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட குளிரூட்டி கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ஜிப்ரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர், பிரதேச செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்கள் சம்மேளனம் கோவிட் காரணமாக மரணிக்கும் ஜனாஸாக்களை பாதுகாக்கும் நோக்கோடு குளிரூட்டியை கிண்ணியாவின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக வழங்கியுள்ளது.

அதற்கான கடிதமும் கிண்ணியா வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் Dr. ஜிப்ரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேநேரம் இதனை வழங்கி வைத்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் குளிரூட்டியை வைத்தியசாலைக்கு கொண்டுவருவதற்கு கனரக வாகனத்தை தனது வேண்டுகோளுக்கமைய உடனடியாக தந்துவிய NCH நிறுவன உரிமையாளர் கந்தளாயைச் சேர்ந்த சகோதரர் நப்ரீஸ் மற்றும் குளிரூட்டியை இறக்கி வைப்பதற்காக க்ரேனைத் (Crane) தந்துதவிய இலங்கை மின்சார சபைக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கிண்ணியா பிரதேச சபைத் தலைவர் நிஹார் அவர்களும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment