சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - நாரஹேன்பிட்ட, வேரஹெர அலுவலக சேவைகளும் இடைநிறுத்தம் - நேரம் ஒதுக்குவதும் இரத்து - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - நாரஹேன்பிட்ட, வேரஹெர அலுவலக சேவைகளும் இடைநிறுத்தம் - நேரம் ஒதுக்குவதும் இரத்து

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்படுவதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2021 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், காலாவதியாகும் தினத்திலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக, சேவைகளை வழங்குதல் மற்றும் பெறுதலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0112677877 எனும் தொலைபேசி வழியாக, முற்பதிவை மேற்கொண்டு சேவைகளைப் பெறுவதற்கான வசதியும் இரத்துச் செய்யப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து சேவைகளையும் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad