தமிழகத்தின் புதிய முதல்வர் ஸராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Sunday, May 2, 2021

தமிழகத்தின் புதிய முதல்வர் ஸராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 வீத்ததிற்கு அதிக வாக்குகளை பெற்ற தி.மு.க கட்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாட்டு தேர்தலை எடுத்துக்கொண்டால் தி.மு.க 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று வரும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது. அந்த வகையில் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பெடுப்பார் என்று நம்புகின்றேன்.

அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் எமது மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதே நேரத்தில், இலங்கையின் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளிற்கும் அவர் தீர்வு தருவார் என்றும் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad