இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 86 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 86 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன் விடுவிப்பு

சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயச்சித்ததாக சந்தேகப்படுகின்ற 86 நபர்களுடன் 11 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, 50 க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நேற்று காலை மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 11 மீன்பிடி படகுகளை சிறைபிடித்து அதில் இருந்த 86 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆவது அலை அதிகரித்து வருவதால், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனை விதித்து 86 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்தனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment